[X] Close

ஜெயலலிதா மரணம் பற்றி பேச தடைபோட முடியாது: நீதிபதிகள் மறுப்பு

jayalalitha-death-case

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவது அவர்களின் பேச்சுரிமை தொடர்பான விவகாரம் என்பதால் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

திருவாரூர் மாவட்டம் குடவசாலை சேர்ந்த அதிமுக பிரமுகரான முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விசாரணை ஆணையம் அமைத்த பிறகும், ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்களும் பிற அரசியல் கட்சியினரும் பல்வேறு கருத்துகளை கூறி வருவதாக தெரிவித்திருந்தார். இவர்களின் பேச்சின் மூலம் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்றும் அவரது மரணத்துக்கு பின்னால் மிகப் பெரிய சதி இருந்துள்ளதாகவும் குழப்பம் விளைவிக்கப்பட்டு வருகிறது. மரணம் குறித்து  நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் மரணம் குறித்து விவாதிப்பதால் அரசு அமைத்துள்ள விசாரணை நேரடியாகவோ, மறைமுகமாக பாதிக்கப்படும். எனவே ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பொது மேடைகளில் பேசுவதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது, விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடிக்க உத்தரவிட்டனர். அப்போது அமைச்சர்கள் பேச தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இது பேச்சுரிமை தொடர்பான விவகாரம் என்பதால் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். 


Advertisement


 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close