[X] Close

திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகை: மு.க.ஸ்டாலின்

Stalin-about-ministers-and-Government-officers

திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ள ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர்களும், அதிகாரிகளும் சிண்டிகேட் அமைத்து அரசு தேயிலைத் தோட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட தனியாரிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக புகார் தெரிவித்தார். அத்துடன் சில்வர் ஓக் மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக அர‌சு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close