அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும், முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சசிகலா தரப்பில் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சசிகலாவுக்கு ஆதரவான 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், 15க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் மற்றும் 4 கார்களில் அழைத்து வரப்பட்ட அவர்கள், சில அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெமிலி பகுதியில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களின் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் சுதந்திரமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார். இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த 130 எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் முறையிட்டபோது விளக்கமளித்த தமிழக அரசு வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் எம்எல்ஏக்கள் யாரும் இல்லை அவர்கள் அனைவரும் நேற்று இரவே அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!