Published : 19,Mar 2023 09:08 AM

‘நாட்டு நாட்டு Team-க்கு...’- வைரலாகும் பிரபுதேவாவின் அசத்தல் நடன வீடியோ!

Prabhu-Deva-and-his-dance-crew-pay-homage-to-RRR-s-Oscar-winning-song-Naatu-Naatu

95-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுவந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

ஆஸ்கர் விருதை பெற்றதையடுத்து, ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு நடிகர்கள், திரைக்கலைஞர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாராட்டினர். அந்தவரிசையில் நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவும் படக்குழுவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

இதில் விசேஷம் என்னவென்றால், தனக்கே உரிய பாணியில் நடனத்தின்மூலம் பாராட்டியுள்ளார் பிரபுதேவா. ஆம், தனது நடனக்குழுவுடன் இணைந்து பிரபுதேவா நடனமாடியுள்ளார். 

image

“நாட்டு நாட்டு… குழுவுக்கு” என பெயரிட்டு, ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ள அசத்தல் வீடியோ இங்கே:

இந்நிலையில் நாட்டு நாட்டு பாடலை பாடிய பாடகர் ராகுலுக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் வரவேற்பளித்துள்ளனர். ஆள் உயர மாலை அணிவித்து, அவரை ரசிகர்கள் மொத்தமாக கூடி வரவேற்றனர்.

இதேபோல ஆஸ்கர் விழாவில் பங்கேற்று திரும்பிய நடிகர் ராம்சரணுக்கும் நேற்றி ஐதராபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்