Published : 14,Mar 2023 07:02 AM

குடும்பத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்... மன உளைச்சலில் பெண் எடுத்த விபரீத முடிவு

3-attempts-suicide-as-continues-death-in-family-at-Edappadi

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விஷம் கலந்த அசைவ உணவை சாப்பிட்டு தாய் மகன் உட்பட மூன்று பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து எடப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது தாயின் அரவணைப்பில் மஞ்சுளா, மகன் பிரகாஷ், மகள் நித்யா ஆகிய மூன்று பேரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் நித்யாவிற்கு பிரகாஷ் என்ற நபருடன் திருமணமாகி 12 வயதில் ரோஷினி என்ற மகள் உள்ளனர். இந்த நிலையில் நித்யாவிற்கும் அவரது கணவர் பிரகாஷுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், செல்வம் என்ற நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நித்யா.

image

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நித்யாவின் இரண்டாவது கணவரும் கொரோனா பெருந்தொற்று நோயால் உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டு மஞ்சுளாவின் தாயும் உயிரிழந்துள்ளார். இப்படி மஞ்சுளாவின் குடும்பத்தில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த மஞ்சுளா, நேற்று அசைவ உணவு சமைத்து அதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி தானும் சாப்பிட்டுவிட்டு தனது மகன் பிரகாசுக்கும் பேத்தி ரோஷினிக்கும் கொடுத்துள்ளார். அதன் பிறகு விஷம் கலந்த அசைவ உணவை சாப்பிட்ட பிரகாஷும், மஞ்சுளாவும் மயங்கி விழுந்ததால் ரோஷினி தனது தாய் நித்யாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

image

இதுகுறித்து தகவலறிந்து வீட்டிற்கு வந்த நித்யா மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூவரையும் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மஞ்சுளாவின் மகன் மற்றும் பேத்தி இருவரும் நலமுடன் இருப்பதாகவும், மஞ்சுளா மட்டும் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்