Published : 11,Mar 2023 10:16 PM

”நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட போகிறேன்” - அமெரிக்க நடிகை லாரன் காட்லிப் உற்சாகம்

American-actress-LAUREN-GOTTLIEB-is-going-to-dance-to-the-song-of-RRR-to-be-played-at-the-Oscars

ஆஸ்கர் விருது விழாவில் ஒலிக்க உள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் பாடலுக்கு அமெரிக்க நடிகை லாரன் காட்லிப் (LAUREN GOTTLIEB) நடனமாட உள்ளார்.

ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி ஸ்டுடியோவில் இந்திய நேரப்படி வரும் திங்கள் கிழமை அதிகாலை நடைபெற உள்ளது. பிரமாண்டமாகவும் வண்ணமயமாகவும் நடைபெறும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குழுவில்  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இடம் பெற்றுள்ளார்.

image

இந்நிலையில் ஆஸ்கர் விழாவில் இசைக்கப்படும் ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட உள்ளதாக அமெரிக்க நடன மங்கை லாரன் காட்லிப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான போட்டியில்  ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் இடம் பெற்றுள்ளது.

ஆர்ஆர்ஆர் படம் ஏற்கனவே மற்றொரு சர்வதேச விருதான கோல்டன் குளோப் விருதையும் வென்றுள்ளது. சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படம் இடம் பெற்றுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்