Published : 11,Mar 2023 07:23 AM

கோவை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு மூளை புற்றுநோய் - நீதிமன்றம் எடுத்த முடிவு!

Brain-cancer-for-Coimbatore-serial-blast-accused

மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதால், கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்துல் ஹக்கீம் என்பவருக்கு மேலும் மூன்று மாதத்துக்கு விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1998 ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் ஹக்கீம், தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு விடுப்பு வழங்கக் கோரி, அவரது மனைவி ரஹ்மத் நிஷா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 30 நாட்கள் அவருக்கு விடுப்பு வழங்கி உத்தரவிட்டது.

image

இந்நிலையில் தற்போது கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு வழங்கப்பட்ட 30 நாட்கள் விடுப்பு முடிவடைந்துள்ளது. அதற்கிடையே இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு நேற்று வந்தது.

அப்போது அவர் தொடர் சிகிச்சையில் இருக்கவேண்டும் என கோவை மருத்துவமனை அளித்த அறிக்கையை அவரது மனைவி தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஓராண்டுக்கு மட்டுமே அவர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, மூன்று மாதங்கள் கூடுதலாக விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

image

வரும் ஜூன் 7 ம் தேதி ஹக்கீம் புழல் சிறையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை அவருக்கு பாதுகாப்புக்காக செல்லும் போலீசார், மருத்துவமனை அழைத்துச் செல்லும் போது தாமதப்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்