Published : 06,Mar 2023 12:31 PM

'கடைசியில் நமக்கே வினையாக மாறப்போகுது' - பிட்ச் விவகாரத்தில் எச்சரிக்கும் சுனில் கவாஸ்கர்

Sunil-Gavaskar-Issues-Clear-Warning-For-Rohit-Sharma-And-Co-Ahead-Of-4th-Test-Against-Australia

வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பது இறுதியில் நமக்கே வினையாக மாறும் என எச்சரித்துள்ளார் சுனில் கவாஸ்கர். 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் தற்போது வரை நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் இரு டெஸ்டில் இந்தியா வென்றது. இந்துாரில் நடந்த மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

image

இதனிடையே 3-வது போட்டி நடந்த இந்தூர் ஆடுகளம் மிக மோசமாக அமைக்கப்பட்டு இருந்ததாக சர்ச்சை உருவானது. பேட்ஸ்மேன்கள் அடிக்க முடியாமல் முழங்காலுக்கு கீழே பந்துகள் சென்றன. மேலும் ஓவராக பவுன்ஸ் ஆகியும், தாறுமாறாக ஸ்விங் ஆகியும் பந்துகள் சென்றதால் பேட்டர்களால் தொட கூட முடியவில்லை. ஆடுகளத்தின் மீது ஐசிசியும் எதிர்ப்பை பதிவு செய்தது. 'இந்தூர் ஆடுகளம் முதல் நாளில் இருந்தே ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்தது' என்று கூறிய ஐசிசி இந்த ஆடுகளத்துக்கு 3 அபராத புள்ளிகளை வழங்கியது. ஒரு பிட்ச் 5 ஆண்டு காலத்தில் 5 அபாரத புள்ளிகளை பெற்றால் அடுத்த ஒரு ஆண்டுக்கு அந்த பிட்ச்சில் எந்த ஒரு சர்வதேச போட்டியும் நடத்தக் கூடாது என்பது ஐசிசி விதிமுறையாகும்.

மோசமான இந்தூர் ஆடுகளத்தின் மீது இந்நாள் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பலர் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பது இறுதியில் நமக்கே வினையாக மாறும் எனக் கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து அவர் 'இந்தியா டுடே'க்கு அளித்த பேட்டியில், ''2012இல் அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியின் கிரேம் ஸ்வான், மாண்டி பனேசர் ஆகியோர் இப்படி சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் கடைசியாக இந்திய அணியை தோற்கடித்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இனியாவது வழக்கமான பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு சமமான பிட்ச்களை அமைக்க வேண்டும். இல்லையேல் நம்மால் எளிதாக வெற்றி பெற முடியும் என்றாலும் இந்தூருக்கு “மோசம்” என்று ரேட்டிங் வழங்கியது போல் அகமதாபாத் மைதானத்திற்கும் ஐசிசி மோசமான ரேட்டிங் வழங்குவதை பார்க்க நேரிடும். 

image

இந்த தரத்தில் பிட்ச்கள் இருப்பது சிறந்த ஐடியா இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான பிட்ச்களை தான் விரும்புவீர்கள். குறிப்பாக முதலிரண்டு நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் ஆதிக்கம் செலுத்துவதையே அனைவரும் விரும்புவார்கள். 3 – 4 ஆகிய நாட்களில் தான் பந்து லேசாக சுழலும். அகமதாபாத் போட்டியில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அங்கேயும் இதே போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச் இருந்தால் நிச்சயமாக இந்தியா வெல்லும். ஆனால் அந்த பிட்ச் அதற்காக நிச்சயமாக ஐசிசியிடம் இருந்து கருப்பு புள்ளிகளை பெறும்” என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்