Published : 06,Mar 2023 10:20 AM

கத்தியால் குத்திய மனைவி இறந்துவிடுவாரோ? அச்சத்தில் விபரீத முடிவு எடுத்த கணவர்

Husband-commits-suicide-after-stabbing-wife-to-death

ஆவடி அருகே குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் மனைவி இறந்து விடுவாரோ என்ற அச்சமடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி அருகே பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவர் இதே பகுதியில் சிற்றுண்டி கடை நடத்தி வந்தார். இவருக்கு கௌதமி (36) என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தம்பதிக்கு இடையே குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், கத்தியால் கௌதமியின் கழுத்தில் குத்தியுள்ளார்.

image

இதில் படுகாயமடைந்த அவரை, மகன் சீனிவாசன் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே மனைவி இறந்து விடுவாரோ என்ற அச்சமடைந்த மணிகண்டன், மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

image

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பட்டாபிராம் போலீசார், சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் தலைமையிலான போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்