Published : 11,Feb 2023 05:26 PM

சராசரியே -50 டிகிரிதான்! இப்படியொரு இடத்திலும் மக்கள் வாழ்கிறார்களா?.. ’ஒய்மயாகோன் நகரம்’

Unlivable-place-in-the-world--The-country-of-Oymyakon

உலகில வாழ தகுதியற்ற நிலப்பரப்பில் இன்று நாம் பார்க்க இருப்பது ஒய்மயாகோன் என்னுன் நகரம்..

கிழக்கு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள சகா குடியரசில் அமைந்துள்ளது ஒய்மயாகோன்ஸ்கி என்னும் நகரம். இது பூமியின் கீழ் பகுதியாக சொல்லப்படும் அண்டார்டிகாவின் வெளிப்புரத்தில் உள்ளது. இக்கிராமத்தில் மொத்த மக்கள் தொகை 500 என்கிறார்கள். ஏரியல் வ்யூவில் பார்க்கும் பொழுது, இவ்விடம் ஒரு வெள்ளைப்போர்வையை விரித்தது போல் காணப்படும். இங்கிருக்கும் உறைபனியானது, மக்களை ஸ்தம்பிக்கச்செய்து விடும்.

image

ஆனால் இங்கிருக்கும் மக்கள் அதில் வாழ பழகி இருக்கிறார்கள். சாதாரணமாக இங்கு மைனஸில் வெப்பநிலை இருந்தாலும், குளிர்காலங்களில் -71.2 டிகிரிக்கு குறைவான வெப்பநிலை வரை செல்லும். வெயிற்காலத்தில் அதிக பட்ச வெப்பநிலை 15 டிகிரியாக இருக்கும். ஆகையால் வெயிற்காலங்களில் கூட இங்கு மரங்கள் வளர்வது மிகவும் அபூர்வம். இப்பகுதியில் யாகுட் ,ஈவ்ன்க் போன்ற பழங்குடியின மக்கள் குழுக்களாக வசிக்கின்றனர், அவர்கள் பல தலைமுறையாக, இங்கு நிலவும் கடுமையான காலநிலைக்கு ஏற்றவாறு வாழ்கையை நடத்துகின்றனர். இவர்களுக்கு மட்டும் தான் இங்கு வாழ்கையை வாழ்வது எளிது.

image

ஒய்மயாகோன் நகரில் கடுமையான வாழ்க்கை அமைந்த போதிலும், குளிரில் எவ்வாறு வளமையாக வளர்வது என்பதைக் கற்றுக்கொண்டனர். இவர்களின் வேலை என்னவென்று பார்த்தால், கலைமான் மேய்த்தல், மற்றும் வேட்டையாடுதல் போன்ற பாரம்பரிய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கிராமத்தில் குளிர் காலங்களில், குறிப்பாக டிசம்பர் மாதத்தில் சூரிய ஒளி அதிகபட்சம் மூன்று மணி வரையும், கோடைக்காலத்தில் குறிப்பாக ஜூன் மாதத்தில் 21 மணி நேரம் வரையும் சூரிய ஒளி காணப்பட்டாலும் இப்பிரதேசம் பனி நிரம்பிய பகுதியாக காணப்படுகிறது, ஆகயால், சாகச சுற்றுலாபயணிகளுக்கு இது பிரபலமான இடமாக மாறியுள்ளது,

image

"Oymyakon" என்ற பெயர் "உறைக்கப்படாத நீர்" என்று பொருள்படும், அதாவது இது கடுமையான குளிர்ந்த வெப்பநிலை இருந்தபோதிலும், அவ்விடத்தில் பனியால் உறையாத ஒரு பகுதியில் வெந்நீர் ஊற்று ஒன்று உள்ளாது. இவ்வெப்ப நீருற்றைக்கொண்டு, அங்கிருக்கும் மக்கள் தங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துக்கொள்வதுடன், அந்நீரை பாய்லர்கொண்டு கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் நீராவியின் உதவியால், வீட்டினுள் கதகதப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

image

மக்களின் வாழ்க்கை முறை

ஆடை: கடும் குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, ஓமியாகோனில் உள்ள மக்கள் விலங்குகளின் தோல்கள் மற்றும் ரோமங்களால் ஆன சூடான ஆடைகளை அணிகின்றனர். தலை , காதுகளை சூடாக வைத்திருக்க ஃபர் தொப்பிகள் காது மடல்கள் போன்ற பாரம்பரிய தலையணிகளையும் அணிவார்கள்.

image

வீட்டுவசதி: ஓமியாகோனில் உள்ள வீடுகள் சிறிய ஜன்னல்களுடன் ,வெப்பத்தைத் தக்கவைப்பதெற்கென்று, களிமண் அல்லது கல்லால் கட்டப்பட்டிருக்கும்.

உணவு மற்றும் விவசாயம்: கோடை மாதங்களில், வெப்பம் அதிகமாக இருக்கும் போது, Oymyakon மக்கள் உருளைக்கிழங்கு மற்றும் கேரட் போன்ற பயிர்களை வளர்க்கிறார்கள். குளிர்காலத்தில், அவர்கள் சேமித்து வைக்கப்பட்ட உணவை தான் நம்பியிருக்கிறார்கள், கலைமான்கள் மற்றும் நரிகள் போன்றவற்றை வேட்டையாடுகிறார்கள்.

image

போக்குவரத்து:

குளிர்காலத்தில், ஓமியாகோனில் உள்ள மக்கள் வெளியில் சுற்றி வர குதிரைகள், கலைமான்கள் இழுக்கும் சவாரிகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் கார் அல்லது டிரக் மூலம் ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு போக அவர்கள் வாகனங்களையும் விலங்குகளையும் பயன்படுத்துகிறார்கள். டீசல் பெட்ரோல் வாகனங்களைப் பயன்படுத்தும் பொழுது, போய் சேரும் இடம் வரை எங்கும் நிறுத்தாமல் வாகனங்களை இயங்கும்படி செய்கிறார்கள். ஏனெனில் அது நின்றுவிட்டால் அதை மீண்டும் இயக்குவது மிகவும் கடினம் என்பதால், அவர்கள் அதை நிறுத்திவிடாமல் ஓட்டுவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். ஓமியாகோன் மக்களின் முக்கிய வேலை விவசாயம் , கால்நடை வளர்ப்பது மற்றும் கட்டுமானம்.

image

image

உணவு வகைகள்:

உணவு வகைகள் என்று பார்த்தால், உருளைக்கிழங்கு, கம்பு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி வெண்ணெய், பாலாடைக்கட்டி மற்றும் புளிப்பு கிரீம் ஓமியாகோனில் ஒரு முக்கிய உணவாகும். கலைமான், குதிரை மற்றும் மாட்டிறைச்சி ,காட்டு காளான்கள் மற்றும் பெர்ரி, சால்மன் மற்றும் ஒயிட்ஃபிஷ் போன்ற நன்னீர் மீன்களும் ஓமியாகோனில் பிரதான உணவாகும்.

image

ஓமியானில் மக்கள் வாழ தகுதியற்ற சூழல் இருந்தாலும், அங்கு பள்ளிகளும், பொருட்கள் வாங்க கடைகளும் இயங்கி வருவது எதைக்குறிக்கிறது என்றால்,   எங்களாலும் இங்கு வாழ்க்கையை நடத்த முடியும் என்று அங்கிருக்கும் மக்கள் உலகத்திற்கு சொல்லி வருகிறார்கள்.

- ஜெயஸ்ரீ அனந்த்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்