Published : 06,Feb 2023 07:00 AM

ஜக்கம்மா சொல்றா... கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க - குறிசொல்லி வாக்கு சேகரித்த நபர்

Erode-by-election-Jakamma-Solra-Jakamma-Solra-The-teller-is-the-person-who-collected-the-votes

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்தில் ஓட்டு போடச்சொல்லி ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என குறி சொல்லிய குடுகுடுப்பைக்காரர் அனைவரையும் கவர்ந்தார்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், சற்று வித்தியாசமாக ஜக்கம்மா சொல்வதாக குடுகுடுப்பைகாரர் குறி கூறியது அனைவரையும் கவர்ந்தது.

image

ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா தாய்ப்பாலை விட கலக்கம் இல்லாதவர் இளங்கோவன், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தான் நல்லாட்சி நடக்கிறது. கள்ளம் இல்லா உள்ளம் கொண்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றால் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற வேண்டும். இத நான் சொல்லல ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என குடுப்பைக்காரர் குறி சொல்வது போல் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

image

இதேபோல் காந்தி போல் வேடமிட்டு ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. எது எப்படியோ கடும் குளிரிலும் ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்