Published : 22,Jan 2023 01:32 PM

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு

Tamil-Nadu-BJP-President-Annamalai-has-Z-Section-security-from-today

மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஏற்கெனவே அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில், 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

image

இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பை நீக்கி, Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து நவீன ஆயுதங்களுடன் மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 வீரர்கள் இன்று முதல் அவருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

image

இதையடுத்து மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அண்ணாமலை சென்னையில் கான்ஃபரன்ஸ் மீட்டிங் மூலம் செய்தியாளரை சந்திக்க உள்ளதாகக் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்