சென்னையை அடுத்த எண்ணூரில் எம்டி டவுன் காஞ்சிபுரம் கப்பலில் எண்ணெய்க் கசிவால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அந்த நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் எம்டி டவுன் காஞ்சிபுரம் என்ற கப்பலும், எம்டபுள்யூ பிவி மேப்பிள் என்ற கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின. அப்போது சென்னை கடற்கரையோரங்களில் கசிந்து மிதந்த எண்ணெய் கழிவுகளை வாளியை வைத்து அள்ளிய விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது பலருக்கும் நினைவிருக்கலாம். பல தன்னார்வ குழுக்கள் பேரல் பேரலாக கழிவை அப்புறப்படுத்தினர். இந்தப் பிரச்னை சம்பந்தமாக இரு கப்பல் நிறுவனங்கள் உரிய நஷ்ட ஈட்டை கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த எண்ணெய் கசிவுக்கு இரண்டு சரக்கு கப்பல்களின் மோதல்தான் காரணம்.
சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வந்த இந்தப் பிரச்னை தொடர்பாக ஆய்வு நடத்தி கப்பல்துறை இயக்குனரகம் அண்மையில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் உரிய நஷ்டத்தை அந்த கம்பெனிகளிடம் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவித்த நிறுவனங்களே சட்டப்படி இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று கப்பல்துறை இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இருப்பினும், இச்சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான டான் காஞ்சிபுரம் கப்பல் மற்றும், எம்டபுள்யூ பிவி மேப்பிள் கப்பல் ஆகிய நிறுவனங்களின் வாதங்களைக் கேட்டறிந்த பின்னரே முடிவுக்கு வர இயலும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காமராஜர் துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள எம்டபுள்யூ பிவி மேப்பிள் கப்பலை விடுவிக்க மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அந்த விபத்து காரணமாக, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன்களின் வரத்து 30 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதனால் மீனவர்களுக்கு சுமார் 900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல் மோதலால் கப்பலில் இருந்த சுமார் 28 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!