
சச்சின் டெண்டுல்கரை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை பதிவேற்றியிருந்தார் சச்சின். அதில் தூய்மை இந்தியாவை உருவாக்குவதற்காக தன்னால் இயன்ற பங்களிப்பை செலுத்தும் வகையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் நிறைய இளைஞர்கள் கைகோர்த்து இந்தப் பணியை மேற்கொண்டிருந்தனர்.
தன் பதிவில் சச்சின், தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் நமது எல்லோருடைய பங்களிப்பும் இருக்கிறது. உங்களது நண்பர்களோடு இணைந்து உங்கள் தெருக்களிலுள்ள குப்பைகளை சுத்தம் செய்ய தொடங்குங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நம்முடைய இளைய சக்திகள் சேர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெரிய அளவில் பங்களிப்பு செய்துவரும் இளைஞர்களை மகிழ்ச்சியோடு காண்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.