[X] Close

செந்தில் பாலாஜி உறவினர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை‌ சம்மன்

IT-department-summons-11-member-from-senthil-balaji-s-family-and-friends

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்‌ஏ செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.


Advertisement

செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில்‌ ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வருமான வரி சோதனையை அடுத்து செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நவ்ரங் சுப்பிரமணி, தியாகராஜன், மனோகரன், சுவாமிநாதன் ‌ஆகிய 4 பேர் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நான்கு கோடியே 25 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close