Published : 03,Dec 2022 12:10 PM

எதிர்ப்புகளை ஒடுக்க செலவு செய்யும் சீன அரசு! விரக்தியும் கோபமும் நிரம்பிய சீன மக்கள்..

China-spends-more-on-quashing-dissent-than-on-defence

உலகம் முழுவதும் கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் பழைய நிலை திரும்பி கொண்டிருக்கும் சூழலில், கோவிட்டின் தொடக்க புள்ளியான சீனாவில் மீண்டும் தொற்றுகள் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 30,000 அதிகமானோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் சீன அரசாங்கம் விழி பிதுங்கி நிற்கிறது. நோய் தொற்றை குறைப்பதாக பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

முறையான முன் அறிவிப்புகள் இல்லாத ஊரடங்குகள், இடைவிடாத சோதனைகள், பாதுகாப்பு என்று கடுமையான பயண விதிமுறைகள் மற்றும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அதிக நாட்கள் தனிமைப்படுத்துதல் என சீன மக்களிடம் விரத்தியும் கோபமும் நிரம்பியுள்ளது. இதனால் சீனாவில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் பொதுமக்கள் தெருக்களில் இறங்கி, 'ஸ்டெப் டவுன் ஷி ஜின்பிங்' , 'எங்களுக்கு சர்வாதிகாரிகள் வேண்டாம்' போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

image
மறுபக்கம் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஷி ஜின்பிங் அரசு இறங்கியுள்ளது. இதனால் போராட்டங்கள் அமைதியான முறையில் ஊர்வலமாக சென்றால் கூட, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்துவதால் எரிக்கிற தீயில் எண்ணெய் சேர்பதாய் அமைந்துவிடுகிறது.சீன அரசு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் எல்லாம் கோவிட்டை கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஊதிய ஏற்றத்தாழ்வு மற்றும் மோசமான பணி நிலமைகள், அடிப்படை பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் சரி செய்ய முடியாமல் திசைத் திருபுவதற்காகதான் என மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

image

மேலும் உலகமே கோவிட் தொற்றின்  மூன்று அலைகளை எதிர்கொண்டது, அதிலிருந்து மெல்ல மெல்ல மற்ற நாடுகள் மேல் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் சீன அரசு சரியாக முறையில் கோவிட்டை கட்டுப்படுத்தாமல்விட்டதன் விளைவும் தான் மீண்டும் மீண்டும் நோய் தொற்று ஏற்படுகிறது. மேலும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும் சரியான பொருளாதார திட்டங்கள் இல்லை. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் மக்களை சகித்துக்கொள்ளவும் அவர்களால் முடியவில்லை. அதனால் தான் கோவிட் தொற்றுகளை காரணம் காட்டி, கட்டுப்பாடுகளை கடுமையாக்கி அனைத்து பிரச்னைகளையும் திசை திருப்பி என சீன மக்கள், அரசாங்கதிற்கு எதிராக கடும் அதிருப்தியில் உள்ளனர்.

image
2020ல் சீனாவில் பொதுப் பாதுகாப்புச் செலவு $210 பில்லியனை (தோராயமாக 1.39 டிரில்லியன் யுவான்) எட்டியது. இது கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது 2020ல் அதன் தேசிய பாதுகாப்பு செலவினத்தை விட 7 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. இந்த செலவினங்கள் அனைத்து மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வீணடிக்கப்படுகிறது என விமர்சங்கள் எழுந்துள்ளது. குவாங்டாங், ஜியாங்சு மற்றும் சின்ஜியாங் ஆகியவை "பொது பாதுகாப்பு" செலவினங்களின் அடிப்படையில் முதல் மூன்று மாகாணங்களாக இருக்கின்றன.

மோசமான பொருளாதார சூழலில், அர்த்தமில்லாமல் "பொதுப் பாதுகாப்பிற்கான" என்ற பெயரில் அதிக நிதி ஒதுக்கீடு தான் சீன மக்களை கடும் கோபத்திற்கு ஆழ்த்தியுள்ளது. நாட்டு நலனை பாதுக்காக்காமல், மக்களை திசை திருப்பும் முயற்சிக்காக இவ்வளவு செலவு செய்வதை நிறுத்திவிட்டு, தேசத்தை காக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என சீன அரசாங்கதிற்கு மக்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள் - யானைக்கும் யானைக்கும் சண்டை' - கடைசியில் நடந்த சோகம்!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்