[X] Close

விஷால், நாசர், கார்த்தி மீது விசாரணை நடத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

Case-against-actor-vishal--Madras-HC-New-order

நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்க உறுப்பினரான வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக விஷாலும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நாசரும், பொருளாராக கார்த்தியும் பொறுப்பேற்றனர். பின்னர் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட நிதி திரட்டும் விதமாக நட்சத்திர கிரிகெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஒளிபரப்பு உரிமையை தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்க நடிகர் சங்கம் தரப்பில் லஞ்சம் பெறப்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என சென்னை மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close