Published : 22,Sep 2017 05:43 AM

அரசுப் பேருந்து - கார் மோதல்: 5 பேர் பலி

Tirupur-bus-car-accident

திருப்பூரில் அரசுப் பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரோட்டில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த கார், அரசுப் பேருந்து ஒன்றை முந்த முயற்சித்துள்ளது. அப்போது அவிநாசி அருகே உள்ள தெக்களூர் 6 வழிச்சாலை பாலத்தின் மீது சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக பேருந்துடன் மோதியது. இதில் நிலைதடுமாறிய கார், மோதிய வேகத்தில் பாலத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு வந்துள்ள போலீசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்