Published : 25,Oct 2022 09:05 AM

2 முறை முயன்றும் பலனில்லை... பிலிப்பைன்ஸில் விபத்துக்குள்ளான தென்கொரிய விமானம்!

KOREAN-AIR-A330-INVOLVED-IN-RUNWAY-EXCURSION-AT-CEBU-AIRPORT

பிலிப்பைன்ஸில் தென்கொரியாவின் விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்து விபத்தில் சிக்கியது. 

தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள், 11 பணியாளர்களுடன் மொத்தம் 173 பேருடன் புறப்பட்ட விமானம், பிலிப்பைன்ஸின் மேக்டன் செபு சர்வதேச விமான நிலையம் நோக்கி பறந்தது. அப்போது பிலிப்பைன்ஸின் லபு லபு நகரில் (LAPU LAPU CITY) தரையிறங்க முயன்றது. 

image

ஆனால் தொடர் கனமழை காரணமாக இரண்டு முறை விமானத்தை தரையிக்க விமானி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏனெனில் விமான ஓடுபாதையில் மழைநீர் தேங்கியிருந்ததால் விமானத்தை தரையிறக்க முடியாத சூழல்.

இதனால் சிறிது நேரம் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த அந்த தென்கொரிய விமானம், மூன்றாவது முறையாக தரையிறக்கியபோது, ஓடுதளத்தில் இருந்து விலகி புல்வெளியில் பாய்ந்தது. இதனால் விமானத்தின் முன்பகுதி சேதமானது. எனினும் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்