Published : 06,Oct 2022 11:14 AM
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா இன்று மோதல்: மழையால் பாதிக்க வாய்ப்பு

லக்னோவில் இன்று மதியம் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி களம் இறங்குகிறது.
இதனிடையே லக்னோவில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. லக்னோவில் இன்று மழை பெய்ய 57 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அக்குவெதர் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச ஈரப்பதம் 83 சதவீதமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மழை பெய்தால், திட்டமிடப்பட்ட நேரமான மதியம் 1 மணிக்கு டாஸ் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்
தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), கேசவ் மகராஜ் (துணை கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜான்மன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னல், அண்டில் பெஹ்லுக்வேயோ, பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, தப்ரைஸ்
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி -கோப்பையுடன் தாயகம் திரும்புவார்களா?