Published : 30,Sep 2022 06:41 PM

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட ’பிரதமர் மோடி’ சென்ற கார்- இணையத்தில் வைரல்.!

Prime-Minister-Modi-s-car-that-gave-way-to-an-ambulance---viral-on-the-Internet-

குஜராத் மாநிலம் காந்தி நகரில் இருந்து அகமதாபாத்துக்கு சென்ற போது பிரதமர் மோடி சென்ற கார் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

அகமதாபாத்தில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதன் பின்னர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து மகிழ்ந்தார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, அகமதாபாத்தில் இருந்து காந்தி நகருக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பிரதமரின் கார் உள்ளிட்ட அவரது பாதுகாப்பு வாகனங்கள் வழிவிட்டன.

image

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்