Published : 29,Sep 2022 08:20 PM

திருசெந்தூர் கோவில் அருகே ஆக்கிரமிப்பை மீட்ககோரிய வழக்கு- கோவில் உதவி ஆணையர் ஆஜராக உத்தரவு

Case-seeking-recovery-of-encroachment-near-Tiruchendur-Temple--Temple-Assistant-Commissioner-ordered-to-appear

திருசெந்தூர் கோவில் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்தை மீட்டு ஒப்படைக்க கோரிய வழக்கில், உரிய ஆவணங்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த மார்கண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடு. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான இடம் திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை கேட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுக்கின்றனர்.

image

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருச்செத்தூரில் உள்ள 3.5 ஏக்கர் சொத்தை மீட்டு உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி ஆதினத்திற்குச் சொந்தமான சொத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மதுரைகிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர் என்றும், அதன்பிறகு, முறைகேடாக பத்திரப்பதிவு செய்து பட்டா செய்து விட்டனர் என்றும், எனவே தருமபுரம் ஆதின மடத்தின் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

image

இதை தொடர்ந்து நீதிபதிகள், திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள ஆதினமடத்தின் சொத்துகள் குறித்த ஆவனங்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்