Published : 17,Sep 2022 07:20 AM

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

Child-marriage-Youth-arrested-for-marrying-girl-child

திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தாலிகட்டிய இளைஞரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை அருகே அகரசென்னியநல்லூர் கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (23). இவர், சிறுமியை திருமணம் செய்யப் போவதாக குழந்தைகள் நல விரிவாக்க அலுவலர் மணிமொழிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தகவலின் பேரில் அங்கு சென்றபோது திருமண கோலத்தில் மோகன்தாசும் அந்த சிறுமியும் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதை தெரிந்துகொண்ட அதிகாரி, பெண்ணின் வயது சான்றிதழை வாங்கி ஆய்வு செய்தார். அப்போது அவர் சிறுமி என்பது தெரியவந்தது.

image

அதேபோல் மோகன்தாஸ் சிறுமிக்கு திருமண ஆசை காட்டி சிறுமியுடன் தனிமையில் இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நல விரிவாக்க அலுவலர் மணிமொழி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மோகன்தாஸ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்