Published : 14,Sep 2022 04:33 PM

ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்ட பாலிவுட், கோலிவுட் சூப்பர் ஸ்டார்கள்? - என்ன காரணம்?

Superstar-Rajinikanth-meets-Shah-Rukh-Khan-in-Chennai-on-Jailer-and-Jawan-sets

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மேலும் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவந்தநிலையில், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோனே (சிறப்புத் தோற்றம்), யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

image

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஆதித்யராம் ஸ்டூடியோஸில் படம் பிடிக்கப்பட்டுவரும்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ஷாரூக்கானை சந்தித்து சில நிமிடங்கள் இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது வாழ்க்கை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்கள் குறித்து இருவரும் பகிர்ந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

image