Published : 10,Sep 2022 08:54 AM

ஜடேஜாவின் காயத்தால் பிசிசிஐ கவலை

BCCI-Unhappy-Over-Ravindra-Jadeja-Knee-Injury-Report

ஜடேஜா குணமடைந்து மீண்டும் களத்திற்கு திரும்ப சுமார் 3 மாதம் காலமாகும் என்பதால், அவர் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விலகுவது உறுதியாகிவிட்டது.

ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். அதன்பின்னர் குணமடைந்து அணிக்கு திரும்பினார். இந்த நிலையில், ஜடேஜாவுக்கு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் போது மீண்டும் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். இதற்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்பதால், அவருக்கு மருத்துவ நிபுணர்கள் அதனை மேற்கொண்டனர்.

image

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜடேஜா, தமக்கு அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜடேஜா, எனக்கு அறுவை சிகிச்சை செய்ய காரணமாக இருந்த பிசிசிஐ, மருத்துவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு, விரைவில் களத்திற்கு திரும்புவேன் என்று கூறியுள்ளார்.

image

ஜடேஜா குணமடைந்து மீண்டும் களத்திற்கு திரும்ப சுமார் 3 மாதம் காலமாகும் என்பதால், அவர் அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விலகுவது உறுதியாகிவிட்டது. இது பி.சி.சி.ஐ.யின் மகிழ்ச்சியை குலைத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ கூறும்போது, "ஜடேஜாவின் காயத்தால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை, அவர் சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை, உலகக் கோப்பை வரும் என்று நினைக்கவில்லை. ஜடேஜாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை" என்று தெரிவித்துள்ளது.

ஜடேஜா இந்த ஆண்டு ஒன்பது டி20 போட்டிகளில், எட்டு இன்னிங்ஸ்களில் 50.25 சராசரியில் 201 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இந்த ஆண்டு அவரது சிறந்த தனிநபர் ஸ்கோர் 46* ஆகும். இது தவிர, அவர் 1/15 என்ற சிறந்த எண்ணிக்கையுடன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிக்க: 'விராட் கோலி ஓபனிங்கில் தொடர்ந்து இறங்குவாரா?' - கடுப்பான கே.எல்.ராகுல் மழுப்பல் பதில்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்