Published : 19,Sep 2017 08:14 AM
ஸ்மார்ட் கார்டில் தேசியக் கொடி

பழனி அருகே ஆயக்குடியில் தயாசுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் தேசியக் கொடி அச்சிடப்பட்டுள்ளது.
பழைய ரேசன் கார்டுகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் பல்வேறு பிழைகளும், குளறுபடிகள் இருப்பதாக ஆங்காங்கே பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆயக்குடியில் தயாசுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ரேசன் கார்டில் அவரின் புகைப்படத்திற்கு பதிலாக தேசியக்கொடி படம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேசன் கார்டில் நடிகை காஜல், செருப்பு, விநாயகர் புகைப்படங்கள் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்தது. மொபைல் ஆப் மூலம் ஸ்மார்ட் கார்டு விவரங்கள், புகைப்படங்களை சிலர் பதிவேற்றம் செய்யும் போது செய்த தவறே இதுபோன்ற குளறுபடிக்கு காரணம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்திருந்தார்.