Published : 04,Sep 2022 01:04 PM

'S' என தொடங்கும் அந்த 4 எழுத்து வார்த்தை... - ராகுல் டிராவிட் பேச்சால் கலகல

Rahul-Dravid-hilariously-avoids-using-the-word-sexy-in-India-s-pre-match-press-conference-vs-Pakistan

ராகுல் டிராவிட் மறைமுகமாக கூறிய அந்த வார்த்தை 'Sexy' என்பதை புரிந்துகொண்ட அனைவரும் கலகலவென சிரித்தனர்.  

ஆசியா கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 'சூப்பர் 4' சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பாகிஸ்தான் சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்ட அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்களை நாங்கள் 147 ரன்களுக்குள் சுருட்டி உள்ளோம். சிறந்த பந்து வீச்சாளர்கள் எங்கள் அணியிலும் இருக்கின்றனர்.

image

மேலும், நான் ஒரு வார்த்தையை கூற விரும்புகிறேன். ஆனால், அந்த வார்த்தையை இங்கு கூற முடியாது. அந்த வார்த்தை எனது மனதில் இருந்து வந்துவிட்டது. எஸ் (S) என தொடங்கும் அந்த வார்த்தை 4 எழுத்துக்களை கொண்டது'' என்றார்.

டிராவிட் மறைமுகமாக கூறிய அந்த வார்த்தை 'Sexy' என்பதை புரிந்துகொண்ட செய்தியாளர்கள் உள்பட அனைவரும் கலகலவென சிரித்தனர்.  

இதையும் படிக்க: துவம்சம் செய்யப்போவது யார்? இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்