Published : 03,Sep 2022 07:58 AM

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Government-bus-collides-with-two-wheeler--two-youths-killed

புதுக்கோட்டையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை நகர காவல் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

image

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வடக்கு 3ஆம் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் (29) மேல 4ஆம் வீதியைச் சேர்ந்த முத்துகருப்பன் (27) ஆகிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நகர காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்