Published : 12,Aug 2022 06:31 AM
சாத்தான்குளம் வழக்கு: நடுவரை தவறாக பேசியதற்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய காவலர்கள்!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை குறித்த விசாரணையின் போது நீதித்துறை நடுவரை காவல் துறையினர் தரக்குறைவாகப் பேசியதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரம் தொடர்பான விசாரணையின் போது, நீதித்துறை நடுவரை தூத்துக்குடி மாவட்ட காவல் அதிகாரிகள் இருவர் மற்றும் ஒரு காவலர் ஒருமையில் மரியாதைக்குறைவாக பேசியதாகக் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளை அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் தவறுக்காக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிரதான வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருந்து விடக் கூடாது என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிக்க: கருணாநிதி குறித்து அவதூறு வீடியோ - இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு