Published : 11,Aug 2022 03:51 PM

நெஞ்செரிச்சல் பிரச்னையால் அவதிப்படுபவரா? இந்த மாற்றங்கள் தீர்வு கொடுக்கும்

Simple-ways-to-get-rid-of-acidity-or-heartburn

அமிலம் வெளியேறுதல் அல்லது நெஞ்செரிச்சல் என்பது பெரும்பாலானவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னை. இதனை நாம் பேச்சுவழக்கில் எதுக்களித்தல் என்கிறோம். வயிற்றில் உருவாகும் அமிலமானது உணவுக்குழாய் வழியாக வெளியே வரும்போது இதுபோன்ற உணர்வு உண்டாகிறது. இதனால் தொண்டை மற்றும் நெஞ்சு பகுதிகளில் ஒருவித எரிச்சல் உணர்வு உண்டாகும். இதைத்தான் நாம் நெஞ்செரிச்சல் என்கிறோம்.

அஜீரணம் அல்லது அமிலத்தன்மையால் (acidity) பொதுவாக நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனால் வாயின் பின்பகுதியில் அதாவது தொண்டைப்பகுதியில் புளிப்புச்சுவையை உணரமுடியும். எப்போதாவது ஒருமுறை இதுபோன்ற உணர்வு ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இதுவே அடிக்கடி ஏற்படும்போது நீங்கள் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளெக்ஸ் (gastroesophageal reflux) பிரச்னையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. சில நேரங்களில் அதீத உணவு அல்லது அதிக காரமான உணவுகளை உண்ணுதல் போன்றவையும் நெஞ்செரிச்சலை உண்டுபண்ணும். எதுக்களித்தல் அல்லது நெஞ்செரிச்சல் பிரச்னையை தடுக்க சில வழிகள்...

image

1. நெஞ்சரிச்சல் பிரச்னையிலிருந்து விடுபட வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியம். குறைந்த அளவில் உணவை பிரித்து உண்ணுதல், எடையை குறைத்தல் போன்றவை நெஞ்செரிச்சலை தடுக்கும்.

2. நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிற வறுத்த உணவுகள், சோடா மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்கலாம்.

3. gastroesophageal reflux பிரச்னையால் அவதிப்படுபவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வது நிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

4. நெஞ்சரிச்சல் பிரச்னைக்கு மற்றொரு முக்கிய காரணம் புகைப்பிடித்தல். எனவே இந்த பழக்கத்தை கைவிடுதல் நல்லது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்