Published : 23,Jul 2022 07:04 PM

ஒரே வருடத்தில் இத்தனை கேப்டன்களா?.. இலங்கையின் சாதனையை சமன் செய்த இந்திய அணி!

India-set-for-unwanted-WORLD-RECORD-Shikhar-Dhawan-set-to-become-7th-Indian-captain-in-calendar-year-equalling-Sri-Lanka-s-record

அதிக கேப்டன்களை கொண்டிருந்த அணி என்ற பெயரை இலங்கையை தொடர்ந்து இந்திய அணியும் பெற்றுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக கேப்டன்களை கொண்டிருந்த அணி என்ற பெயரை இலங்கையை தொடர்ந்து இந்தியாவும் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டார். இதன் மூலம் இந்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட 7-வது கேப்டன் என்ற பெயரை தவான் பெற்றுள்ளார்.

இதற்கு முன் விராட் கோலி, கே.எல். ராகுல், ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இ்ந்தாண்டில் பல்வேறு தருணங்களில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளனர்.

இந்த வருட இந்திய அணியின் கேப்டன்கள்

1. விராட் கோலி - தென் ஆப்பிரிக்கா - டெஸ்ட்

2. கே. எல்.ராகுல் - தென் ஆப்பிரிக்கா - ஒருநாள்

3. ரோகித் சர்மா - இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து - டி20, டெஸ்ட்

4. ரிஷப் பந்த் - தென் ஆப்பிரிக்கா - டி20

5. ஹர்திக் பாண்ட்யா - அயர்லாந்து - டி20

6. பும்ரா - இங்கிலாந்து - டெஸ்ட்

7. தவான் - மேற்கிந்திய தீவுகள் அணி - ஒருநாள்

image


கடந்த 2017-ம் ஆண்டு இலங்கை அணிக்கு 7 பேர் கேப்டனாக செயல்பட்டிருந்தநிலையில், இந்த ஆண்டு இந்திய அணி அதனை சமன் செய்துள்ளது.

ஒரே ஆண்டில் அதிக கேப்டன்கள்

7 கேப்டன்கன் : இந்தியா (2022)

7 கேப்டன்கன் : இலங்கை (2017)

6 கேப்டன்கள் : ஜிம்பாப்வே (2001)

6 கேப்டன்கள் : இங்கிலாந்து (2011)

6 கேப்டன்கள் : ஆஸ்திரேலியா (2021)

இதையடுத்து இந்திய அணியை கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பழைய பதிவுகளை பகிர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்