[X] Close

காரில் கடத்தப்பட்ட 198 கிலோ கஞ்சா பறிமுதல்

Chennai-198-kg-cannabis-seized-in-car

சென்னையை அடுத்த அம்பத்தூரில் காரில் கடத்தப்பட்ட 198 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாதவரம் அருகே புழல் - தாம்பரம் பைபாஸில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே காரை நிறுத்திவிட்டு கார் ஓட்டுநர் தப்பி ஓடினார். அந்தக் காரை சோதனையிட்டபோது அதில் 198 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. புதுச்சேரி பதிவு எண் கொண்ட அந்தக் காரை பறிமுதல் செய்த அம்பத்தூர் காவல்துறையினர் தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close