Published : 15,Sep 2017 04:44 PM

லண்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு

Parsons-Green-Underground-blast-a-terror-incident--say-police

லண்டன் மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டன் தலை‌நகர் ல‌ண்டனில் உள்ள பார்சான்ஸ் கிரீன் டியூப் மெட்ரோ சுரங்க ரயி‌ல் நிலையத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்ததால் பயணிகள் அலறியபடி ஓடினர். தகவல் அறிந்து பார்சான்ஸ் கிரீன் டியூப் ரயில் நிலையத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, பயணிகளை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

மேலும் வெடிகுண்டு வெடித்ததில் சிலர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டு பயணிகள் அலறியடித்தபடி ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர். பின்னர் நடத்திய சோதனையில் வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் எ‌ன காவல்துறையினர் உறுதி செ‌ய்துள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவத்தால் லண்டன் மெட்ரோ சுரங்க ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்