Published : 13,Jul 2022 07:15 AM

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு நடக்கும் சப்ளை... கஞ்சா வளையத்தில் சிக்கிய மாணவர்கள்

chennai--4-Students-arrested-in-Ganja-Case

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 4 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஷாலினிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கல்லூரி மாணவர்களை கண்காணித்து அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்தனர்.

image

அப்போது கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறையில் தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான நிகில் (18), ஜஸ்வந்த (19), அல்லா ராமசந்திரன் (19), அல்லா யஷ்வந்த குமார் (20) ஆகிய நான்கு கல்லூரி மாணவர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நான்கு பேருக்கும் ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை ஆவதாகவும், சில நேரங்களில் இவர்களே ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்