[X] Close

17, 18 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

The-possibility-of-heavy-rain-on-17th-and-18th

17, 18 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால், இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் ஓரளவிற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, நாளை முதல் அதாவது 16-ஆம் தேதி முதல் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 17, 18 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், கர்நாடகாவிலும், கேரளாவின் வயநாடு உள்ளிட்டப் பகுதிகளிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று இரவும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சூளகிரியில் 5 சென்டி மீட்டர் மழையும், அரவக்குறிச்சி மற்றும் உதகமண்டலத்தில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close