Published : 11,Jul 2022 01:03 PM

'கிரிக்கெட்டில் ஃபார்ம் குறைவது இயல்புதான்' - விராட் கோலிக்கு ரோகித் சர்மா ஆதரவு

Donot-Even-Understand-Why-They-Are-Called-Experts-Rohit-Sharma-On-Outside-Noise-Regarding-Virat-Kohli-Form

''ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்றிரண்டு தொடர்கள் மோசமாக அமையக்கூடும். கிரிக்கெட்டில் இது இயல்பானது'' என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.

அண்மைய காலமாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தவித்து வருகிறார் விராட் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இரு ஆட்டங்களில் ஆடியுள்ள விராட் கோலி 1 ரன்னும், 11 ரன்களும் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். இதனால் கோலியை டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என ஒருசிலரும், அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

image

இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அதில், ''எக்ஸ்பெர்ட்ஸ் வெளியில் இருந்து விளையாட்டை பார்க்கிறார்கள். அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. நாங்கள் எங்கள் அணியை உருவாக்குகிறோம். இதற்கு பின்னால் நிறைய சிந்தனை இருக்கிறது. நாங்கள் வீரர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோம். இவை வெளியில் இருந்து நீங்கள் அறியாத விஷயங்கள். எனவே வெளியில் நடப்பது முக்கியமல்ல. உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

image

ஃபார்மை பற்றி பேசினால், எல்லோரும் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் வீரரின் தரம் பாதிக்கப்படாது. ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்றிரண்டு தொடர்கள் மோசமாக அமையக்கூடும். கிரிக்கெட்டில் இது இயல்பானது. இதன்மூலம் அவரை மோசமான வீரராக கருதிவிட முடியாது. அணியில் அந்த வீரரின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும். விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல'' என்று ரோகித் சர்மா கூறினார்.

இதையும் படிக்க: வியக்கவைத்த சூர்யகுமாரின் அதிரடி... வீணாகிப்போன இங்கிலாந்தின் வெற்றி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்