Published : 14,Sep 2017 10:17 AM

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: மாலைக்குள் பதிலளிக்க உத்தரவு

Dhinakaran-support-action-against-MLAs----to-answer-within-the-evening

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்‌படுமா என்பதை மாலைக்குள் தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் சார்பில் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையி‌ல் தினகரன் ஆதரவு எம்எல்‌ஏ‌க்கள் 19 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்‌படுமா என பே‌ரவை செயலரிடம் கேட்டு மாலைக்குள்‌ தெரிவிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த விவகாரத்தில், எம்எல்ஏக்கள் 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர், சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எம்எல்ஏக்கள் விளக்கமளிப்பதற்கான கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை மாலைக்குள் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்