Published : 15,Jun 2022 01:56 PM

என்ன ஆனது தீபிகா படுகோனேவுக்கு? - பிரச்னையும் தவிர்க்க உதவும் வழிமுறைகளும்

is-deepika-padukone-caused-Tachycardia

பாலிவுட்டின் உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடிய தீபிகா படுகோனே ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோது திடீரென இதயத் துடிப்பு அதிகரித்ததன் காரணமாக உடனடியாக காமினேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் அவரது உடல்நிலை சீராகி மீண்டும் படபிடிப்புக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இது போன்ற அதீத இதயத் துடிப்புக்கு arrhythmia அல்லது Tachycardia என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனையடுத்து, வெறும் 36 வயதே ஆன, அதுவும் ஃபிட்னஸில் எந்த குறையும் வைத்திருக்காத தீபிகா படுகோனேவுக்கே இதயத் துடிப்பு அதிகரிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் சாமானிய மக்களிடையே பெருமளவில் பரவில் பரபரப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், தற்போது ஓட்டப்பந்தைய வாழ்க்கை முறையில் எந்த வயதினருக்கு எப்போது என்ன மாதிரியான உடல் உபாதை வரும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஆகவே இப்படியான அதிகபடியான இதயத்துடிப்பு போன்றவற்றை சீராக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.

image

அதன்படி ஐதராபாத்தை சேர்ந்த மூத்த கார்டியோ நிபுணரான மருத்துவர் ரமேஷ் டைம்ஸ் நவ் நடத்திய கலந்துரையாடலின் போது Tachycardia குறித்து விரிவாக கூறியிருக்கிறார்.

அதில், இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக மன அழுத்தம், உடல் மற்றும் உளவியல் ரீதியிலான பிரச்னைகள் அல்லது வெகுநேரம் வேலை செய்வது, அதிகபடியான கஃபின் உட்கொள்ளுதல், இரத்த சோகை, ஹார்மோன் மாற்றம் போன்றவை பொதுவான காரணங்களாக பார்க்கப்படுகிறது என இதயத்துடிப்பு திடீரென அதிகரிப்பது ஏன் என்ற கேள்வி மருத்துவர் ரமேஷ் கூறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக, இந்த இதயத்துடிப்பை சீர் செய்ய என்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு,
ஒருவருக்கு திடீரென இதயத் துடிப்பு சீரற்றதாக இருப்பதாக உணர்ந்தால் அதற்கான காரணத்தை கண்டறிய உடனடியாக கூடுதலான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். atrial fibrillation காரணமாக சில நேரங்களில் சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படக்கூடும். இவற்றை கண்டறிய ECG, Echocardiogram, Holter monitoring, Thyroid profile மற்றும் சில அடிப்படை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

image

அந்த பரிசோதனை முடிவின் அடிப்படையில் சில அல்லது வெகு காலத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். சிகிச்சை எடுத்தும் நிலமை சீராகாவிடில் இதய நோய் நிபுணரை அணுகி என்ன பிரச்னை என்பதை ஆலோசித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு மருத்துவர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், அதீத இதயத்துடிப்பு எத்தகைய அபாயமானது? என்ற கேள்விக்கு இதயத் துடிப்புடன் கூடிய cardiomyopathy அல்லது ventricular tachycardia போன்ற தீவிர இதய நிலையைக் கண்டறிய முடியும். படபடப்பு, மூச்சுத் திணறல் அல்லது மயக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

க்ளீவ்லேண்ட் கிளினிக் வல்லுநர்கள் tachycardia-ல் உங்கள் இதயம் அடிக்கடி துடிப்பதால், துடிப்புக்கு இடையில் இரத்தத்தை நிரப்புவதற்கு நேரம் இல்லை என்று எச்சரிக்கின்றனர். உங்கள் இதயம் அனைத்து செல்களுக்கும் தேவையான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்க முடியாவிட்டால் இது ஆபத்தானது.

image

tachycardia தாக்கத்தின் போது உங்கள் இதயம் அடிக்கடி துடிப்பதால், துடிப்புக்கு இடையே ரத்தத்தை நிரப்புவதற்கு நேரம் இருக்காது என்று Cleveland Clinic வல்லுநர்கள், எச்சரிக்கிறார்கள். இப்படியான சூழலில்
இதயத்துக்கு தேவையான ரத்தமும், ஆக்சிஜனும் செல்லாவிடில் ஆபத்தானதாக முடியும். ஆகவே தடுப்பு முறைகள்தான் இதற்கு சிறந்தவையாக இருக்கும் என கூறுகிறார்கள் என மருத்துவர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஆகவே,

* உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கிக்கொள்ளாதீர்கள்.
* உங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்
* இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்களான புகைபிடிப்பது, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
* உடல் பருமன் அல்லது அல்லது அதிக எடை கூட இதயத்தை பலவீனமாக்கும். எடையை குறைத்து உடலமைப்பை பரமாரியுங்கள்.
* இதயத்திற்கு ஊட்டச்சத்துதான் தேவை, அடைப்புகள் அல்ல. எனவே ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
* மது அருந்துவதை கட்டுப்படுத்துங்கள். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும். * அதிகப்படியான குடிப்பழக்கம் இதய தசையை பாதித்து cardiomyopathy-ஐ கொடுக்கும்.
* இறுக்கமான நிலை, கவலைகள், பதற்றம், மனச்சோர்வெல்லாம் இதயத்தை காயப்படுத்தக்கூடியது. மன அழுத்தத்தை கவனியுங்கள்.

மேற்குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றினால் tachycardia என்ற இதயத்துடிப்பு அதிகமாவதில் இருந்து தப்பிக்கலாம் என Cleveland Clinic வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனவே உடல் எடையை குறைக்கவோ, டயட் பிளான் மாற்றவோ, என்ன மாதிரியான உடல்நிலை சார்ந்த தொந்தரவுகள் இருந்தாலோ உடனடியாக உரிய மருத்துவர்களை அணுகி சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று நோய் நொடியில்லா வாழ்வை நோக்கி பயணிப்பதே நலம்.

-ஜனனி கோவிந்தன்

ALSO READ: 

முகத்தை விட பாதங்களை பராமரிப்பதே அதிமுக்கியம் - நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு..!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்