Published : 12,Sep 2017 10:34 AM

அரியானாவில் தமிழ் தினம்.... பஞ்சாப்பில் கேரள தினம்... - பிரதமர் மோடி விநோத யோசனை

Tamil-Day-in-Haryana--Kerala-Day-in-Punjab---Prime-Minister-Modi-s-strange-idea

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உரையாற்றி இந்த ஆண்டுடன் 125 வருடங்கள் முடிவடைகின்றன. இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் விதமாக இதைபோன்ற விழாக்களை கொண்டாடுவது அவசியம் என வலியுறுத்தி பேசியுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் ‘சகோதர சகோதரிகளே’ என்று உறவு சொல்லி அழைத்து பேசிய பேச்சு இன்று வரை உலக அரங்கில் அதிகம் பேசப்படும் உரையாகப் போற்றபடுகிறது. அந்த அற்புத நிகழ்வின் நினைவு நாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது. 

சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றியதன் 125–வது ஆண்டுவிழா மற்றும் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழாவில் முன்னிட்டு   கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அதில் அவர் “கல்லூரிகளில் பல்வேறு தினங்கள் கொண்டாடுகிறார்கள். ரோஜா தினம் கூட கொண்டாடப்படுகிறது. அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு மாநிலத்தில் உள்ள கல்லூரி, பிற மாநிலத்தின் கலாசாரத்தையும் கொண்டாட வேண்டும். உதாரணமாக, அரியானாவில் உள்ள கல்லூரியில் ‘தமிழ் தினம்’ கொண்டாடலாம். பஞ்சாபில் உள்ள கல்லூரியில் ‘கேரளா தினம்’ கொண்டாடலாம். அப்போது அவர்களது பாடல்களை பாடி, அவர்களை போலவே உடை உடுத்தலாம். இதுபோன்ற கலாசார பரிமாற்றங்கள், அந்தத் தினத்தை ஆக்கப்பூர்வமானதாக செய்யும். ‘ஒரே இந்தியா, மாபெரும் இந்தியா’வை உருவாக்க இவை உதவும்.” என்று மோடி பேசினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்