கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ, நடனங்களோ இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி, சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களிலும் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இதனால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட மனுக்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க... பிரபல ஹரியானா பாடகி மாயம்: 12 நாட்களுக்கு பிறகு சடலமாக உடல் மீட்பு - நடந்தது என்ன?
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தமிழ்ச்செல்வி, பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும். எந்த பிரச்சினையும் வராது என மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தவோ, ஆபாசமான நடனங்கள் ஆடவோ கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி, சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Loading More post
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - விசாரணையில் அம்பலம்
ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix