Published : 11,Sep 2017 01:56 PM

குர்மீத் ராம் ரஹீம் ஒரு செக்ஸ் அடிமை: சிறை மருத்துவர் தகவல்

gurmeet-ram-rahim-singh-is-a-sex-addict-says-doctor-who-examined-him-in-jail

குர்மீத் ராம் ரஹீம் ஒரு செக்ஸ் அடிமை என்பதாலேயே சிறையில் அவரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை என்று பரிசோதனை செய்த சிறை மருத்துவர் கூறியுள்ளார்.

இரண்டு பெண் சீடர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் சிறையில் நீரிழிவு நோயினால் அமைதியில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குர்மீத்-ஐ பரிசோதனை செய்த மருத்துவர் குழுவில் உள்ள ஒரு மருத்துவர் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார். அதாவது குர்மீத் ஒரு செக்ஸ் அடிமை என்றும், அதனாலேயே அவர் சிறையில் நிம்மதியின்றி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

குர்மீத்-ன் இந்த பிரச்னையை சரி செய்ய முடியும், தாமதித்தால் பின்னர் பெரிய பிரச்னைக்கு அவர் ஆளாக நேரும். அவருக்கு போதை பழக்கம் இருந்ததா என்பது குறித்து இன்னும் சரிவர தெரியவில்லை. ஆனால் தேரா சச்சா சவுதா-ன் முன்னாள் உறுப்பினர் ஒருவர், குர்மீத் ஊக்க பானங்களும், பாலியல் உறவுக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேக பானங்களையும் தினசரி குடித்து வந்ததாகவும் கூறினார்.

இதனிடையே சிறையில் தனக்கு மசாஜ் செய்வதற்காக ஹனிபிரீட் என்ற பெண்ணை தன்னுடன் தங்கவைக்க அனுமதி அளிக்குமாறு குர்மீத் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்