வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக டெல்லியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்தனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு தேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளின் கூட்டணியே வெற்றியை தீர்மானிக்கும் என பல்வேறு மாநில கட்சிகள் தலைவர்கள் மற்ற பிராந்திய கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலுக்கு தேசிய கட்சியை விட மாநில கட்சிகளே மாற்று சக்தி என தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் நிறுவனருமான கே.சந்திரசேகர் ராவ் முன்னெடுத்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தரவு தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரை சந்தித்து 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆலோசனைகளை முன் வைத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் அதிகபட்ச மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தர பிரதேசம் மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை சந்திரசேகர ராவ் கோருகிறார். அதன் அடிப்படையில் டெல்லியில் இன்று நடக்கும் சந்திப்பில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், உத்திரபிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இருவரும் சந்தித்து பேசி கொள்கின்றனர். இந்த சந்திப்பின்போது 2024 மக்களவைத் தேர்தலில் "ஒன்றிணைந்த மாநில கட்சிகளின்" கூட்டணிக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் சண்டிகரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர பகவந்த் மான் ஆகியோரையும் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார்
Loading More post
ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்... 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix