விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விசாரணை கைதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம்_ திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (36). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவர் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் விழுப்புரம் அருகே வேடம்பட்டுவில் உள்ள விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்நிலையில் சிறைக்கு வந்து சுமார் மூன்று மாதமாகியும் உறவினர்கள் அவரை ஜாமீனில் எடுக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை சிறை கழிப்பறைக்குள் சென்ற முருகன் நீண்டநேரமாக வெளியே வராததால் சிறை போலீசாரும், சக சிறைக் கைதிகளும் உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். கழிவறையின் ஜன்னலில் தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக சிறைத்துறையினர் அவரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்திருக்கின்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் விசாரணைக் கைதி முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை சம்பவம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்