தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி, பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் சந்துரு (16). இவர் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருவதால், தேர்வு எழுதுவதற்காக காலையில் தேவாரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவர் சந்துரு, உத்தமபாளையத்தில் இருந்து ராயப்பன்பட்டி செல்லும் வழியில் உள்ள புதிய புறவழிச் சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று மோதியதில் மாணவர் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் காவல்துறையினர், மாணவர் சந்துருவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து உத்தமபாளையம் காவல்துறையினர், விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதினொன்றாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதுவதற்காக ஆவலாக பள்ளிக்குச் சென்ற மாணவர் கல்லூரிப் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!