[X] Close

அஸ்வின் டவுட்: ராகுல், கேதாருக்கு வாய்ப்பு

Rahul--kedar-likely-to-retain-spots

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு இன்று நடக்கிறது. இதில் இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற வீரர்களே இடம்பெறுகிறார்கள்.


Advertisement

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இன்னும் 2 போட்டியில் அவர் விளையாட வேண்டி இருப்பதால், ஆஸ்திரேலிய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படமாட்டார். அதனால் அக்‌ஷர் படேல், அல்லது இலங்கை தொடரில் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா சுழற்பந்துவீச்சாளர்களாக களமிறக்கப்படலாம். 

’மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கேதர் ஜாதவுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். அவர் பகுதி நேர பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்படுவதால் அணியில் இடம்பிடிப்பார். அதே நேரம் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் லோகேஷ் ராகுலுக்கும் வாய்ப்பிருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார்,  பும்ரா ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்தால், உமேஷ் யாதவ் அல்லது முகமது ஷமி இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும்’ என்று கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close