[X] Close

தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

Chance-to-rain-in-Tamilnadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு ஆந்திராவில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து தற்போது தமிழகம் மற்றும் கர்நாடகப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆணைக்காரன் சத்திரத்தில் 9 சென்டி‌‌மீட்டரும், மேட்டுப்பாளையத்தில் 6 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close