[X] Close

கூட்டத்திற்கு தடை விதித்திருந்தாலும் மீறியிருப்போம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

trichy-dmk-meeting-against-neet-stalin-speech

நீட்டுக்கு எதிரான பொதுக்கூட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் அதை மீறியிருப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Advertisement

திருச்சி திமுக பொதுக்கூட்ட மேடையில் மு.க.ஸ்டாலின், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருவமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளட்ட தலைவர்கள் மேடைக்கு வந்து அனிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், நீட்-க்கு எதிரான பொதுக்கூட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் அதை மீறியிருப்போம். போராட்டங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடாது என்று தான்  உச்சநீதிமன்றம் கூறியதாகவும் பொதுக்கூட்டத்துக்கு  தடை  விதிக்கவில்லை. வரும் 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர் போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பேசினார்


Advertisement

கூட்டத்தில் திருமாவளவன், நீட் தேர்வுக்கான மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை விளக்கவே இக்கூட்டம். நீட் தேர்வை எதிர்க்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை. மேலும் அரசு அளித்த போலியான நம்பிக்கைகள் தகர்ந்ததால் மன முடைந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார். மோடி அரசின் பிடிவாத ஆட்சியால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனவு தகர்ந்தது என்று திருமாவளவன் கூறினார்.

பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி, இந்தியாவுக்கு சமூகநீதியை கற்றுக் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. மேலும் இந்தியாவிலேயே 69% இட ஒதுக்கீட்டை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு, 28 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு என  கி.வீரமணி தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close