சேலத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி கடை உரிமையாளரை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் ஜெயின் ஹித்தீஸ் என்பவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இங்கு 6 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அந்த கடையில் விற்பனையாளராக பணியாற்றிய கோமதி என்பவருக்கு கடையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் சிலர் கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். அப்போது கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயின் ஹித்திசை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடையில் மேலாளராக பணியாற்றி வரும் பெண்ணிற்கும் அதே கடையில் பணியாற்றி வந்த கோமதிக்கும் இடையே ஏற்கனவே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் இதில் கடை உரிமையாளர் ஜெயின் ஹித்திஸ் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக இது தொடர்பாக பிரச்னை இருந்து வந்த நிலையில், கடை உரிமையாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் குறித்து இருதரப்பினரிடமும் பள்ளப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai