Published : 08,Sep 2017 03:09 AM

ரூ.2.7 கோடி சிக்கிய விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏ மகனுக்கு சம்மன்?

IT-department-Notice

சென்னையில் ரூ.2.7 கோடி சிக்கிய விவகாரத்தில், முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ மகனுமான ஒருவருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பவுள்ளதாக தெரியவந்துள்ளது.

வேளச்சேரியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் தமிழன் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.7 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையின் உத்தரவுப்படி, டிராவல்ஸ் நிறுவனர் தமிழன் வருமான வரித்துறையில் ஆஜரானார். அப்போது வருமானவரித்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உரிய ஆவணங்களை டிராவல்ஸ் நிறுவனர் சமர்ப்பிக்காததால் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வருமானவரித்துறையினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் டிராவால்ஸ் நிறுவனர் தமிழன் முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஒருவரின் மகனுக்கு பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும், அவருக்கும் வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்