Published : 22,Apr 2022 07:54 PM

‘ஆர் யூ ஓகே பேபி’.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ட்ரெயிலர்

Vijay-Sethupathi-kaathu-vaakula-rendu-kadhal-trailor-out

நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சமந்தாவின் காதலராக பிரபல கிரிக்கெட் விரர் ஸ்ரீசாந்த் நடித்துள்ளார்.

நடிகர்கள் பிரபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது.  ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டநிலையில், இன்று படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

image

ட்ரெயிலரின் ஆரம்பத்தில் ‘குஷி’ படத்தில் நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா கோயில் ஒன்றில் விளக்கு அணையாமல் பாதுகாக்க ஓடி வந்து தங்களுக்குள் அறிமுகம் ஆவது போன்று, இந்தப் படத்திலும், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துக்கொள்வது போல் உள்ளது. அதேபோல், கமல்ஹாசன், அமலா நடிப்பில் வெளியான ‘சத்யா’ படக் காட்சிகள், ‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா ஷெட்டி, பிரபாஸ் வில் அம்பு எய்வதுபோன்ற காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

அதேபோல் நயன்தாரா, ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ‘நல்ல ரௌடிகிட்ட என்னை கூட்டுட்டு போறீங்களா?’ என்பதை விஜய் சேதுபதியிடம் இந்தப் படத்திலும் கேட்கிறார். விஜய் சேதுபதியும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வரும் ‘ஆர் யூ ஓகே பேபி’ என்று சமந்தாவைப் பார்த்து கேட்கிறார். படத்தின் ட்ரெயிலர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. உதயிநிதியின் ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்